மேலப்பாளையத்தில் நடைபெற்ற மவ்லித் எதிர்ப்பு மார்க்க விளக்கக் கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பஜார் திடலில் கடந்த 26.02.2010 வெள்ளிக்கிழமை அன்று மவ்லிது மீலாது விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எஸ்.ஒய். செய்யது மஸ்ஊது யூசுபி தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி “பள்ளிவாசல் மவ்லிதும் பரவும் நோய்களும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மாநிலப் பேச்சாளர் ஏ. அப்துல்மஜீத் உமரி “ கைவிட்ட அவ்லியாக்களும் காக்கின்ற காவல்துறையும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மேலப்பாளையம் நகரத் தலைவர் எஸ்.பி. மைதீன், செயலாளர் ரோஷன் ஆகியோர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.