மேலப்பாளையம் கிளையில் இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 26-6-2011 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா அவர்கள் முகாமை துவக்கி வைத்தார்கள்.  ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சுமார் 50 நபர்களுக்கு அனைத்து செலவுகளும் இலவசமாக செய்து தரப்பட்டது.