மேலப்பாளையத்தில் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 08.05.2010 சனிக்கிழமை அன்று மேலப்பாளையம் காட்டுப் புதுத் தெருவில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஏ. செய்யது அலீ தலைமை தாங்கினார்.

மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள், “கொடிய வரதட்சணையும் கோரத் தண்டனையும்’‘ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மாநிலப் பேச்சாளர் கே.எஸ். அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள், “கந்தூரிகளும் கப்ர் வழிபாடுகளும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில்  எஸ்.ஒய். செய்யது மஸ்ஊது யூசுபி மற்றும் மத்ரஸத்துர்ரஹ்மான் மாணவ, மாணவியர் ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.