மேலப்பாளையத்தில் இரத்த பிரிவு கண்டறியும் முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதூர் ரஹ்மான் பள்ளிவாசலில் கடந்த 12.06.2011 அன்று இரத்தப்பிரிவு கண்டறியும் முகாம் நடைபெற்றது. லைப் லைன் இரத்த வங்கியுடன் இணைந்து இம்முகாம் நடத்தப்பட்டது.

இதில் ஆண்கள், பெண்கள், மற்றும் 200 – க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இரத்தப் பிரிவை கண்டறிந்து பயனடைந்தனர்.

இந்த முகாமில் விபத்து மற்றும் அவசர கால கட்டத்தில் இரத்தம் தேவைப்படுவோருக்கு தங்களது இரத்தத்தை கொடுப்பதற்கு தங்கள் பெயர்,முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை கொடுத்து சென்றுள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ் !!!