மினா அப்துல்லா கிளையில் எளிய மார்க்கம் நிகழச்சி & தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் மினா அப்துல்லா கிளையில் கடந்த 28-6-2011 செவ்வாய் கிழமை அன்று இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துக் கொள்ளும் வகையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்கிற கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

கேள்விக்கான பதிலை தாயகத்திலிருந்து வந்திருந்த மாநில பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மக்கள் எளிதில் விளங்கிக் கொள்ளும் விதத்தில் மிக எளிமையாக விளக்கினார்கள்.

மேலும் அன்றய தினம் மினா அப்துல்லா கிளையில் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் நூலகத்தை திறந்து வைத்து இதை எவ்வாறு நடைமுறையில் பயன்படுத்த வேண்டும் என்று கிளை நிர்வாகிகளுக்கு விளக்கினார்.

மேலும் அன்ற தினம் தர்பியா நடைபெற்றது இதில் பிறசமய சகோதரர்களிடையே தஃவா செய்வது எப்படி என்பது குறித்து ரஹ்மதுல்லாஹ் அவர்கள் விளக்கினார்கள்.

நிகழ்ச்சியை மினா அப்துல்லா கிளை சகோதரர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் அல்லாஹ்வின் பேருதவியால் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

வந்திருந்த மக்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.