மடுகரை பகுதியில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் மடுகரை பகுதியில் கடந்த 23-6-2011 அன்று நோய்வாய்ப்பட்டுள்ள அப்துல் கரீம் என்ற சகோதரரை சுல்தான் பேட்டை கிளை சகோதரர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் ஏகத்துவ கொள்கையை விளக்கி தஃவா செய்தனர்.

மேலும் சமீபத்தில் இறந்துவிட்ட ஒரு சகோதரரின் வீட்டுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி மரணம் தரும் படிப்பினை என்பது குறித்து தஃவா செய்யப்பட்டு பி.ஜே அவர்கள் உரையாற்றிய “மரணத்திற்குப் பின்” சொற்பொழிவு டிவிடி தொகுப்பு வழங்கப்பட்டது.