பேராவூரணியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மாவட்டம் பேராவூரணி கிளை சார்பாக கடந்த 09.05.2010 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாற்றுமத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு மவ்லவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள். கேள்வி கேட்ட அனைத்து சகோதரர்களுக்கும் ரியாத் மண்டலம் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. 28 மாற்றுமத சகோதரர்கள் தங்களுக்கு உள்ள இஸ்லாம் சம்பந்தமான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இதில் மாற்றுமத சகோதரர்கள் உட்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.