பேட்டையில் முஸ்லிம் கடை மீது தாக்குதல் – தவ்ஹீத் ஜமாஅத் நடவடிக்கை

சேக் செய்யது அலி (வயது 31) என்ற சகோதரர் பேட்டை மல்லிமால் தெருவில் வசித்து வருகின்றார். இவர் மல்லிமால் தெரு அருகே உள்ள மெயின் ரோட்டில் அர்ரஹ்மான் என்ற பெயரில் புரோட்டா கடை நடத்தி வருகிறார்.

கடந்த 21.06.2011 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இவரது கடை அருகே உள்ள மெயின் ரோட்டில் பேட்டை மலையான் மேடு பகுதியைச் சார்ந்த பொடியன் என்பவரின் சவ ஊர்வலம் சென்றது. சவ ஊர்வலத்தில் சென்ற பெருமாள், சேகர், பத்மநாபன், வசந்தகண்ணன், ஆறுமுக நயினார், குமார் உள்பட 20 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் சேக் செய்யது அலியின் புரோட்டா கடையில் அத்துமீறி நுழைந்து ஷேக் செய்யது அலி மற்றும் கடை ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்தனர்.

ஏன் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்ட கடை உரிமையாளர் சேக் செய்யது அலியைக் கீழே தள்ளிவிட்டு, அதைத் தடுக்க வந்த கடை ஊழியர் மேலப்பாளையத்தைச் சார்ந்த மைதீன் அப்துல் காதர் என்பவரையும் சேர்த்து 20 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கொலை வெறி தாக்குதல் நடத்தியதோடு மட்டுமல்லாமல் கடையில் உள்ள பொருட்களைச் சூறையாடினர். சேதத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ 50,000 ஆகும்.

சம்பவம் நடந்த நேரத்தில் கடை ஊழியர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் நேரடியாகச் சென்று தங்கள் கடையில் சிலர் குடிபோதையில் அத்துமீறி நுழைந்து தகராறு செய்கின்றனர். தாங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு கூறினார்.

சம்பவத்தைக் கேள்விப்பட்ட சேக் செய்யது அலியின் சகோதரர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை நகரச் செயலாளர் சேக் தம்பி, நகரத் தலைவர் அப்துல் பாரி, மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்தனா;.

தகராறு செய்தவர்கள் மீது சட்டப்படி உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் மனு அளித்தனர். புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் சம்பவத்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளான கடை உரிமையாளர் சேக் செய்யது அலி மற்றும் கடை ஊழியர் மைதீன் அப்துல் காதர் ஆகியோருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு மெமோ வழங்காமல் தாமதித்தனர்.

இதைக் கண்டு கொதித்தெழுந்த பேட்டை நகரத் தலைவர் அப்துல் பாரி அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் யூசுப் அலி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவத்தை விளக்கியதோடு மட்டுமல்லாமல் காவல்துறையின் மெத்தனப் போக்கை சுட்டிக் காட்டினார்.

உடனடியாக மாவட்டத் தலைவர் யூசுப் அலி அவர்கள் கமிஷனர் வரதராஜன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேட்டையில் நடந்த சம்பவத்தை விளக்கி சம்பந்தப்பட்ட நபர்களான பெருமாள், சேகர், பத்மநாபன், வசந்தகண்ணன், ஆறுமுக நயினார், குமார் உள்பட 20 பேர் கொண்ட கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டார்.

அதன் பிறகு காவல் துறை கமிஷனர் வரதராஜன் அவர்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகு காவல்துறையினர் பத்மநாபன், வசந்தகண்ணன், ஆறுமுக நயினார், குமார் உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனா;.

மேலும் சம்பந்தப்பட்ட மீதி நபர்களையும் கைது செய்ய நெல்லை மாவட்ட தலைவர் யூசுப் அலி அவர்கள் உரிய அதிகாரிகளிடம் வற்புறுத்தி வருகின்றார்

சமுதாயத்தில் யாருக்குப் பிரச்சனை என்றாலும் தன்னலம் கருதாமல் களம் இறங்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் துரித நடவடிக்கையை அந்தப் பகுதி மக்கள் நெஞ்சார பாராட்டுகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!