பெண்கள் தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி

சேலம் பெண்கள் தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி இறைவனின் உதவியால் கடந்த 25.06.2011 சனிக்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில்

2010-2011 ஆண்டில் படித்த 35 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் மாணவி ஜெசீமா அழைப்பணியின் அவசியம் என்ற தலைப்பிலும் தற்பெருமை தவிர்ப்போம் என்ற தலைப்பில் மாணவி சபீஹாவும் பிறர் மானம் காப்போம் என்ற தலைப்பில் மாணவி ஜெசீனாவும் உரையாற்றினார்கள்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ். சுலைமான் அவர்கள் பட்டம் வழங்கி பெற்றோர்கள் படித்த பிள்ளைகளை அழைப்பப்பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தில் சிறப்புரை ஆற்றினார்.

பட்டமளிப்பு நிகழ்ச்சி சேலம், சூரமங்களம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் சிறப்புற முடிவடைந்தது. அல்ஹம்துலி்ல்லாஹ்!