பெங்களூர் வினோபா நகரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

கர்நாடக பகுதி TNTJ வின் சார்பாக தலைநகர் பெங்களூரில் தொடர்ந்து மார்க்க விளக்க நிகழ்ச்சி வினோபா நகரில் அமைந்துள்ள ஃபாத்திமா மதரசாவிலும் நடந்து வருகிறது.

கடந்த ஞாயிறு, 21.03.2010 அன்று TNTJ மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி: அஷ்ரஃப்தீன் பிர்தௌசி அவர்கள் “மரணத்திற்கு பின்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மக்களுக்கு கேள்விக் கேட்க வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்களின் மார்க்க மற்றும் இயக்க ரீதியான சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் 50 பெண்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்- அல்ஹம்துலில்லாஹ். இந்த நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது – அல்ஹம்துலில்லாஹ்!!