பெங்களூரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள KTJ தாவா மையத்தில் வாரந்தோறும் TNTJ மார்க்க அறிஞர்கள் மற்றும் தாயிகளை கொண்டு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்ற 19.03.2010 அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சிக்கு KG ஹள்ளி கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சகோதரர்: அஹ்மத் கபீர் அவர்கள் “புறக்கணிக்கப்படும் நபிவழியும், வரவேற்கப்படும் பித்அத்களும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் – அல்ஹம்துலில்லாஹ்!