பெங்களூரில் நடைபெற்ற வராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

DSC01276DSC01281DSC01280கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் தாவா மையத்தில் வாரந்தோறும் TNTJ மார்க்க அறிஞர்கள் மற்றும் தாயிகளை கொண்டு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று (22.01.2010) மார்க்க விளக்க நிகழ்ச்சிக்கு KG ஹள்ளி கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

மௌலவி: முபாரக் அலி தவ்ஹீதி அவர்கள் “சுயப் பரிசோதனை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மக்களுக்கு கேள்வி கேட்க அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் மக்கள் மிக ஆர்வத்துடன் மார்க்க மற்றும் இயக்கம் சம்பந்தமாக தமது ஐயங்களை கேட்டு தெளிவுப்பெற்றனர். ஒவ்வொரு கேள்விக்கும் மௌலவி:முபாரக் அலி தவ்ஹீதி மிக தெளிவாகவும் விரிவாகவும் பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் – அல்ஹம்துலில்லாஹ்!