புதுப்பட்டினத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

புதுப்பட்டினத்தில் கடந்த 17.08.2010, அன்று தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சீர்காழி நகரம் மற்றும் புதுப்பட்டினம் கிளை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாம் நாகை மாவட்ட பார்வை இழப்பு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் 20 நபர்களுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான எற்பாடு செய்யபட்டது. மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.