பனைக்குளம் கிளையில் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 29-06-2011 அன்று பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடைபெற்றது. இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்கள் ஓரிரைக் கொள்கை என்ற தலைப்பில் சிறிய உரை நிகழ்த்தியபின் கேள்வி பதில் நிகழ்ச்சி தொடங்கியது.

வந்திருந்த பெண்கள் நபி வழி சம்பந்தமாக தங்களது ஐயங்களை எழுப்பி தெளிவு பெற்றனர். நேரமின்மையால் நிகழ்ச்சி இரவு 9.30 மணிக்கு நிறைவு பெற்றது.