பணைக்குளத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

panaikulam_blood_donationதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பளைக்குளம் TNTJ சார்பாக கடந்த 22.2.2009 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையுடன் இணைந்து பணைக்குளம் TNTJ நடத்தியது. இம்முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் சைபுல்லாஹ் கான், ஆரிஃப் கான், முஹைதீன் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காலை 10 மணிக்கு இம்முகாமை மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் (DSP) முருகேசன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.