நெல்லையில் மாநகராட்சி மண்டல அலுவலக முற்றுகைப் போராட்டம்!

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தராமல் வரிகளை பன்மடங்கு உயர்த்தி வரும் நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பில் கடந்த 15.07.2011 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மாநகராட்சி மண்டல அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆண்கள்  பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு   மாநகராட்சியைக் கண்டித்தும் மேலப்பாளையத்தை மீண்டும் நகராட்சியாக மாற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பிபனர்.

குடிநீர் பிரச்சனையை சரி செய்யக் கோரி பெண்கள் காலிக் குடங்களுடன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி தி ஹந்து ஆங்கில பத்திரிக்கையில் வெளியானது

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2232406.ece#.TiJFYnXU8LE.gmail