துளசேந்திரபுரம் கிளையில் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளை சார்பாக கடந்த 18-6-2011 அன்று M.S. திருமண மண்டப்பத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் துளசேந்திரபுரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இயங்கி வரும் உம்முள் மு.’.மினீன் பெண்கள் கல்வியகத்தில் பயின்று முடித்த முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும் கோடைக்கால பயிற்சி முகாமில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றதழ்களும் வழங்கப்பட்டது

இதில் ஏராளமான் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.