துபையில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்

மார்க்கப் பணிகளோடு சமுதாயப் பணிகளையும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை கடந்த 22-07-2011 வெள்ளி அன்று அல்-வஸல் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் “இரத்ததானமுகாமை”நடத்தியது.

இம்முகாமிற்கு மண்டல தலைவர் முஹம்மது நாசிர் MISCஅவர்கள் தலைமை தாங்கினார்கள்.மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

காலை 8.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணி வரை நடந்த இம்முகாமில் 142 சகோதரர்கள் குருதி அளித்தனர்.

இதில் அல்கூஸ்,ஜபல் அலி,சத்வா,சோனாப்பூர்,ஹோர் அல் அன்ஸ்,கிஸைஸ்,தேரா ஆகிய கிளையிலிருந்து பல சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாம் காலை 8.00 மணிக்குதான் ஆரம்பித்தாலும் 7.30 மணிக்கே கிளைகளிலிருந்து பல சகோதரர்கள் மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.

இம்முகாமில் மாற்றுமத சகோதரர்களும் கலந்து கொண்டது நாம் செய்யும் சமுதாய பணிக்கு மற்ற மதத்தினரிடம் நம் ஜமாஅத்திற்குள்ள நன்மதிப்பிற்கு ஒரு சான்றாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

மண்டலப் பொருளாளர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பான முறையில் களப் பணி ஆற்றினர்.

இப்புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!