துபாய் ஹோர் அல் அன்ஸ் கிளையில் தர்பியா மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி

இறைவனின் கிருபையால் கடந்த 22/07/2011 அன்று துபாய் -ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பில் தர்பியா மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி மண்டலச் செயலாளர் அஷ்ரப் தலைமையில் ,கிளை நிர்வாகிகள் முன்னிலையில் போஸ்ட் ஆஃபீஸ் பள்ளிவாயிலுக்கு எதிரில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

இதில் உளூ செய்வதிலிருந்து தொழுகையின் இறுதியில் ஸலாம் கொடுப்பது வரையிலான நிலைகள் செயல் முறையோடு குரான் ஹதீஸ் அடிப்படையில் விளக்கப்பட்டது.அதை தொடர்ந்து தொழுகை தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.

மக்ரிப் தொழுகைக்கு பிறகு இஸ்லாம் குறித்த பொதுவான கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும் சகோ.தாவூத் கைஸர் MISC அவர்கள் மிகச் சிறப்பாக நடத்தினார்.

நிகழ்வில கலந்து கொண்ட சகோதரர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று கிளை நிர்வாகிகளை கேட்டுக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.