திருமங்கலக்குடி நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி கிளையில் கடந்த 02.03.10 செவ்வாய்க்கிழமை அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் கலிபுல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் H.சர்புதீன் மற்றும் மாவட்ட து. தலைவர் B.இம்தியாஸ் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக கிளைப் பொருளாளர் உஸ்மான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.