திருப்பூரில் காதலர் தின எதிர்ப்பு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட மாணவரணி மற்றும் KNP காலனி கிளையின் சார்பாக கடந்த  13.02.2011 அன்று இரவு 7.00 மணிக்கு KNP காலனி முதல் வீதியில் காதலர் தின எதிர்ப்பு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் ‘நாங்கள் சொல்வது இது தான்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

மேலும் அவரை தொடர்ந்து சகோதரர் கோவை.ரஷீத் அவர்கள் ‘காதலர் தினமும் பெற்றோர்கள் கடமையும் ‘ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதில் ஆண்களும்,பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.