திருப்பனந்தாள் கிளையில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளையில் கடந்த 08.05.10 சனிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ஏன் எதற்கு என்ற தலைப்பிலும், மாவட்ட தொண்டரணி செயலாளர் சுவாமிமலை ஜாபர் அவர்கள் நற்செயல்கள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் அக்பர் அலி அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை தலைவர் ஷாஜஹான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.