திருச்சியில் எழை மாணவர்களுக்கு 70 ஆயிரம் மதிப்பில் நோட்டுபுத்தகங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக கடந்த 12-6-2011 அன்று ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 300 ஏழை மாணவ மாணவியருக்கு ரூபாய் 70 ஆயிரம் மதிப்பிலான நோட்டு புத்தகங்கள் ஸ்கூல் பேகுகள் வழங்கப்பட்டது.

பின்னர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் பெரும்பாவங்கள் என்ற தலைப்பிலும் சேக் அஹ்மத் அவர்கள் பயன் தரும் கல்வி என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஆரோக்கிய சாமி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஹாரூன் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!