கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் பட்டமளிப்பு நிகழ்ச்சி

ஏக இறைவனின் கிருபையால் கடந்த 10/07/2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் TNTJ கிளை சார்பில் இயங்கும் ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்சசி மர்யம் திடலில் நெல்லை மாவட்ட  தலைவர் சகோ.யூசுஃப் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில மேலாண்மைக்குழு தலைவர் சகோ.ஷம்ஷுல்லுஹா ரஹ்மானி அவர்கள் மாணவிகளுக்கு பட்டம் வழங்கி இன்றைய பெண்களின் இஸ்லாமிய பிடிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

சகோ.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் தியாகமா? சூழ்ச்சியா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

சகோதர,சகோதரிகளும்,பெற்றோர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..