செல்வபுரம் தெற்கு கிளையில் கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம் கடந்த 12.06.2011 அன்று நடைபெற்றது.

இதில் மாநில மாணவரணி செயலாளர் அல் அமீன் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் மனிதனும் மரணமும் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக செல்வபுரம் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் அதிக அளவில் பெண்கள் பயான் நடத்தப்பட்டதன் விளைவாக பெண்களுக்கு என்று அதிக இடவசதி செய்யப்பட்டு இருந்தும் இடம் போதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அல்லாஹு அக்பர்.

இதில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.