சூரமங்களம் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சூரமங்களம் கிளையில் கடந்த 12.06.11 அன்று தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக சூரமங்களம் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டியன் கலந்து கொண்டார்.

அவருக்கும் சேலம் அரசு மருத்துவமனை இரத்த இரத்த வங்கி அதிகாரி டாக்டர் ரவீந்திரன் அவர்களுக்கும் சூரமங்களம் கிளைத் தலைவர் சஃபியுல்லாஹ் திருக்குர்ஆன் மொழியாக்கம் வழங்கினார்.

பின்னர் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினார்.

ஆண்களில் 38 நபர்களும் பெண்களில் 32 நபர்களும் மொத்தம் 70 நபர்கள் தங்கள் இரத்தங்களை வழங்கி மற்றவர்கள் உயிர் வாழ உதவிபுரிந்தனர்.

சேலம் பத்திரிக்கையாளர்கள், புகைப்படநிபுணர்கள் ஆகியோர் வந்து செய்தி சேகரித்து சென்றனர்.