சிக்கல் நாயக்கன்பேட்டையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல் நாயக்கன்பேட்டை கிளையில் 15.03.10 திங்கட்கிழமை அன்று பெண்களுக்கான மார்க்க விளக்க கூட்டம் நடைப் பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியை மற்றும் மாணவிகள் சிறப்புரை ஆற்றினார்கள், இரண்டாம் ஆண்டு மாணவி சகோதரி: யாஸ்மின் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார், சகோதரி:சாரா ஆலிமா (ஆசிரியை) அவர்கள் நரகத்திற்கு கொண்டு செல்லும் தொலைகாட்சி என்ற தலைப்பிலும், மூன்றாம் ஆண்டு மாணவி சகோதரி:ரிசானா பர்வின் அவர்கள் மூட நம்பிக்கை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி ஜெம்சியா பேகம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.