குவைத் மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல மர்கஸில் கடந்த 04-06-2010 வெள்ளிக் கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  தாயி சகோ. சையத் மசூது அவர்கள் “ஏகத்துவமும் சமுதாய பணியும்“ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

பயானுக்குப் பின் ஜூலை மாநாட்டிற்கு நம் சொந்தங்களை அனுப்ப கூறியும் பொருளாதார உதவி பற்றியும், சாதி சான்றிதல் பெரும் போது லப்பை, தக்கினி, சேக், பட்டானி, மாப்பிள்ளா, மற்றும் சையது என்கிற ஆறு பிரிவுகளில் ஏதாவது ஒன்றின் கீழ் சாதி சான்றிதழ் பெற வேண்டும் என்றும் அதனால் என்னென்ன அரசு பலன்கள் பெறலாம் என்பது பற்றியும் சகோ.முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் விளக்கினார்கள்.

மேலும் வந்திருந்த சகோதரர்களின் சந்தேகங்களுக்கு குர்ஆன் ஹதிஸின் படி பதிலளிக்கப்பட்டது