குவைத் மண்டல பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல பொதுக்குழு கூட்டம் கடந்த 24-06-2011 வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப்பின் ஹவல்லி ரிஹேபிலேசன் ஸ்கூலில் மாநில பொதுச் செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முதலாவதாக மண்டல செயலாளர் கூத்தாநல்லூர் ஜின்னா அவர்கள் மண்டலத்தில் நடைபெற்ற கடந்த கால நிகழ்வுகள் பற்றி விரிவாக விளக்கினார்கள்.

அடுத்ததாக பொருளாளர் சம்சுதீன் அவர்கள் இரண்டு ஆண்டு கால வரவு செலவு கணக்குகளை பொதுக்கூட்டத்தில் சமர்பித்தார்கள்.

அடுத்து பேசிய மண்டல தலைவர் ராஜா அஹமது சரீஃப் அவாகள்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் செயல்பாடுகள் பற்றியும் அடுத்து வரக்கூடிய புதிய நிர்வாகம் தொடர்ந்து செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்தும் விளக்கினார்.

அதன் பின்னர் புதிய நிர்வாகிகள் ரஹ்மத்துல்லா அவர்கள் முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.