குவைத் மண்டலத்தின் மனிதநேயப் பணி

குவைத் மண்டல பொதுக்குழுவிற்காக தமிலகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கடந்த 22-6-2011 அன்று குவைத் ரிக்கா பகுதியிலுள்ள அல்-அதான் பெரிய மருத்துவ மனையில் உள்ள நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார்கள்.

மருத்துவமனையில் பெரம்பலூர் ரோவர் கல்லூரி தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற சகோதரர் ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்த மாநில பொதுச் செயலாளர் சகோ கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அவர் தயாகம் செல்வதற்கு சிரமம்படுவைத அறிந்தவுடன் உடனிருந்த குவைத் மண்டல நிர்வாகிகளுக்கு இந்த சகோதரர் சுரேஷ் அவர்களை தாயகத்திற்கு அனுப்புவதற்கான ஏற்ப்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டார்கள்.

உடனே மண்டல நிர்வாகிகள் துரிதமாக செயல்பட்டு அந்த சகோதரரை கடந்த 26 -6 -2011 அன்று தாயகம் அனுப்பி வைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்!