குவைத் பயான்மிஷ்ரஃப் கிளையில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் பயான்மிஷ்ரஃப் கிளையில் கடந்த 04-06-2010 வெள்ளிக் கிழமை ஜூம்மாவுக்குப் பின் மிஷ்ரஃப் ஜூம்மா பள்ளிவாசலில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குவைத் மண்டல தலைவர் சகோ. ராஜா அஹமது சரீஃப் அவர்கள் “ஏகத்துவமும் சமுதாய பணியும்“ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

பயானுக்குப் பின் ஜூலை மாநாட்டிற்கு நம் சொந்தங்களை அனுப்ப கூறியும் பொருளாதார உதவி பற்றியும் விளக்கப்பட்டது மேலும் வந்திருந்த சகோதரர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப் பட்டது