குவைத் ஃபாஹில் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி

குவைத் மண்டலம் ஃபாஹில் ஏரியாவில் உள்ள பாகிஸ்தான் பள்ளியில் கடந்த 30-6-2011 வியாழக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு மண்டலம் சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் இஸ்லாமிய சொற்ப்பொழிவு நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொது செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லா அவர்கள் கலந்துக் கொண்டு சொர்க்கமும் தொழுகையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நூற்றுக்கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்.வந்திருந்த மக்களுக்கு ஃபாஹில் கிளை சார்பாக சிற்றுண்டி வழங்கப்பட்டது.

ஃபாஹீல் கிளை நிர்வாகிகள் கடந்த ஒருவார காலமாக சிறப்பாக செயல்பட்டு நிகழச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை ஃபாஹில் கிளை சகோதரர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.