குரும்பூர் கிளையில் ஜனவரி 27 விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கிளை சார்பாக கடந்த 23.1.2011 அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஜனவரி 27 ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்துகின்ற பேரணி ஆர்ப்பாட்டத்தின் அவசியம் குறித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட தலைவர் அப்பாஸ் மற்றும் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் M.S சுலைமான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரபீக் நன்றியுரை கூறினார்.

300க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள்