கும்பகோணத்தில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை நகரத்தில் நேற்று (03.06.10) ஹாஜியார் தெரு மீன் மார்கெட் அருகில் ஜூலை 4 விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் H.சர்புதீன் அவர்கள் தலைமை தாங்கினார். கிளை பொருளாளர் ஹாஜா மைதீன், நலத்திட்ட அணி செயலாளர் இப்ராஹீம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை செயலாளர் M.சாகுல் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.