கானத்தூரில் நடைபெற்ற இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூரில் கடந்த 11-4-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாம் செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையுடன் இணைந்து நடத்தப்பட்டது.

முஜிர்புர்ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாநிலப் பொருளாளர் சாதிக் அவர்கள் இதில் கலந்து கொண்டார்கள். 65 சகோதரர்கள் இம்முகாமில் இரத்த தானம் செய்தனர்.