கத்தர் மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

கத்தர் மர்கசில் கடந்த கடந்த 7-7-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டலச் செயலாளர் சகோதரர் A. சாக்ளா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

சகோதரர் M. ஷாஜஹான் அவர்கள், “இஸ்லாமும் இங்க்லீஷ் மீடியமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மௌலவி தமீம் அவர்கள், “நபி வழி திருமணம்” என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் “ரமலான் நோன்பின் நோக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை செயலாளர் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் வெளியிடப்பட்டது.