கத்தர் மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் கடந்த 09/06/2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழச்சி நடைபெற்றது. இதில் செயலாளர் சகோ. A. முஹம்மத் இலியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், “நபித்தோழியர் வரலாறு” என்ற தொடர் தலைப்பில் “அஸ்மா பின்த் உமைஸ்(ரலி)” அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.

பின்னர் மௌலவி. அன்சார் அவர்கள் “இஸ்லாம் கூறும் சபை ஒழுக்கங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மௌலவீ . அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் “சபிக்கப்பட்டவர்கள்” என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 100 க்கும்மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை, செயலாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.

மேலும், செயலாளர் மௌலவி. முகம்மதலி அவர்கள் 27-05-11 அன்று நடந்த பெண்களுக்கான எழுத்துத் தேர்வு போட்டியில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்த சகோதரிகளின் பெயர்களை (1. ஷமீனா பேகம் & ரஹானா சுல்த்தானா 2. பானு இப்ராஹீம் & ஆமீனா பெனாசிர் 3. மெஹர்பானு அப்பாஸ் மந்திரி & சபீனா ரபீக்) அறிவித்தார்கள்.