கத்தரில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹுவின் அருளால், கத்தர் மண்டலத்தில் கடந்த 29-7-2011 அன்று பெண்களுக்கு பெண்களே நடத்தும் “பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி”, மாலை 7:00 மணிக்கு துவங்கியது.

சகோதரி ஷமீனா பேகம் அவர்கள் “ஒரு மூமின் மற்றொரு மூமினுக்கு செய்ய வேண்டிய கடமைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோதரி அஷ்ரஃப் நிஷா அவர்கள் “ஜின்களும் வழிகெடுக்கும் ஷைத்தானும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ரமலான் சிறப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த 13 வயதிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளுக்கான பேச்சுப் போட்டியில், மாணவி நஜிஹா “நபியை நேசிப்போம்” என்ற தலைப்பிலும், மாணவி அர்ஷதா மர்யம் “பொறுமை” என்ற தலைப்பிலும் பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.