கத்தரில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

ifthar-photoகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் , கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்களுக்காக நேற்று 18/09/2009 வெள்ளிக்கிழமை பொது இப்தார் நிகழ்ச்சி ஒன்றை , அபூபக்கர் தனியார் மேல் நிலை பள்ளியில் ஏற்பாடு செய்து இருந்தது.
சரியாக மாலை ஐந்து மணிக்கு மாநில தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஒலி ஒளி கலந்தாய்வு ( video conferencing ) மூலம் தலைமையகம் சென்னையிலிருந்து ” ரமலான் நம் மீது ஏற்படுத்திய மாற்றம் என்ன ? ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
நோன்பு திறப்பத்தற்க்கான பேரீச்சம் பழம் , தண்ணீர் , ஜுஸ் ஆகியவைகள் நுழைவாயிலில் கொடுக்கப்பட்டது . நோன்பு திறந்தவுடன் , மக்ரிப் தொழுகையை சகோதரர் மௌலவி அன்சார் அவர்கள் நடத்தினார்கள் . பின்னர் வந்திருந்த அனைவருக்கும் , உணவு பரிமாறப்பட்டது.

முப்பதுக்கும் மேற்பட்ட செயல் வீரர்கள் இப்தார் அரங்கத்தை அமைக்கும் பணியிலும் , உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறும் பணியிலும் சிறப்பாக செய்தனர் .

அரங்கத்தின் அனைத்து துப்புரவு பணிகளையும் ICC நிறுவனம் சிறப்பான முறையில் செய்தது.

இந்நிகழ்ச்சியில் எந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர சகோதிரிகள் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் இலவச சிடிக்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி சிறப்பாக நடத்திதந்த அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும். அல் ஹம்துலில்லாஹ்!