கடையநல்லூர் நகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

dsc_0694dsc_0720dsc_0711தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளையில் இன்று (2-11-2009) நகராட்சியை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துனைத் தலைவர் ஜஃபருல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இப்போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மேலான்கைக் குழு உறுப்பினர் அப்துந்நாசர் அவர்கள் கண்டன் கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் தனிக்கை குழு உறுப்பினர் சைபுல்லாஹ் காஜா அவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

தனது உரையில்:

பாம்பு கடியின் காரணமாக மரணமடைந்த சிறிமி நஜ்லாவின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 2 லட்சம் தமிழக அரசு வழங்கவேண்டும் அதை நகராசட்சி உடனடியாக பெற்று தர ஏற்பாடு செய்ய வேண்டும்.
நகராட்சியில் புதிதாக குடிநீர் இணைப்பு பெறும்போது அதிகாரிகள் லஞ்சமாக ரூ 1500 கேட்கின்றனர். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கடையநல்லூர் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு மட்டும் வரைமுறையின்றி உயர்த்தப்பட்ட வீட்டு வரியினை சீர் செய்ய வேண்டும்.

இன்னும் பல்வேறு மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.