கடையநல்லூரில் தெருமுனைப் பிரச்சாரம்

அல்லாஹ்வின் கிருபையால், கடந்த 06. 02. 2011 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம கடையநல்லூர் கிளை ஏற்பாடு செய்த தெருமுனைப் பிரச்சாரம் பேட்டை ரைஸ்மில் வடக்குத் தெருவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் ‘இஸ்லாத்தில் பேய் பிசாசு உண்டா? ‘ என்ற தலைப்பில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்களும் ‘மூடநம்பிக்கையை ஒழிப்போம்’ என்ற தலைப்பில் சகோ. அப்துல் பாஸித் அவர்களும் உரையாற்றினார்கள்.