கடையநல்லூரில் தெருமுனைப் பிரச்சாரம்

அல்லாஹ்வின் கிருபையால், கடந்த 25. 01. 2011 (செவ்வாய்கிழமை) மாலை இஷா தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளையில் ஜனவரி 27 பேரணி, ஆர்ப்பாட்ட விளக்க தெருமுனை விழிப்புணர்வுப் பிரச்சாரம் விஸ்வா விளை அருகில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் சகோ. யூசுப் பைஜி அவர்களும் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்களும் சகோ. முஹம்மது கோரி அவர்களும் ‘ஜனவரி 27 ஏன்? எதற்கு? ‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.