எஸ்.பி பட்டிணத்தில் தவ்ஹீதிற்கு எதிராக நடந்த அடக்குமுறையும் தவ்ஹீத் ஜமாஅத் கையான்ட சட்ட ரீதியான நடவடிக்கையும்!

6எஸ்.பி பட்டிணத்தில் தவ்ஹீதிற்கு எதிராக நடந்த அடக்குமுறையும் தவ்ஹீத் ஜமாஅத் கையான்ட சட்ட ரீதியான நடவடிக்கையும்!6எஸ்.பி பட்டிணத்தில் தவ்ஹீதிற்கு எதிராக நடந்த அடக்குமுறையும் தவ்ஹீத் ஜமாஅத் கையான்ட சட்ட ரீதியான நடவடிக்கையும்!6எஸ்.பி பட்டிணத்தில் தவ்ஹீதிற்கு எதிராக நடந்த அடக்குமுறையும் தவ்ஹீத் ஜமாஅத் கையான்ட சட்ட ரீதியான நடவடிக்கையும்!எஸ்.பி பட்டிணத்தில் நடக்க இருந்த தவ்ஹீத் பள்ளி திறப்பு நிகழ்ச்சி….

அரசாங்கத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள எஸ்.பி பட்டிணத்தில் உள்ள நமது மஸ்ஜிதுந்நூர் பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று (31-7-2009) நடைபெற இருந்தது.

இதற்காக வெள்ளிக்கிழமை காலையில் இருந்து மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பல தவ்ஹீத் சகோதரர்கள் பள்ளிவாசலுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜும்ஆ தொழ வந்திருந்தனர்.

சுமார் 11.00 மணி அளவில் தீடீர் என்று ஊர் சுன்னத் ஜமாஅத் காரர்கள் பள்ளிவாசல் முன் கூடி ‘அவனுகள வெளிய வரசொல்லுங்க இல்லன்னா உண்டு இல்லன்னு பன்னிடுவோம்’ என்று கூறிக் கொண்டு பள்ளிசால் முன் நின்று கொண்டிருந்த போலிசார் மீது கல் எரிந்தனர்.

இதில் ஒரு காவல் துறை அதிகாரிக்கு மண்டையில் இரத்தம் வரும் அளவிற்கு காயம் ஏற்பட்டது.

ஊர் ஜமாஅத்தின் மிரட்டலுக்கும் பயந்து லஞ்சைத்தை வாங்கிக் கொண்டு பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுது கொண்டிருந்த தவ்ஹீத் சகோதரர்களை போலீசார் பூட்ஸ்காளுடன் உள்ளே வந்து ‘பள்ளிவாசல விட்டு வெளியே போங்க இல்லன்னா நாங்க உங்கள வெளியப்போக வப்போம் என்று மிட்டினர்.

நமது நிர்வாகிகள், நாங்க எங்க சார் ஜும்ஆ தொழுவது என்று கேட்டதற்கு, அதல்லாம் எங்களுக்கு தெரியாது முதல்ல வெளியோ போங்க என்று ஆக்ரோஷமாக கத்தினர்.

பள்ளியின் கதவை திறக்க வில்லை என்றால் துப்பாக்கியால் சுட்டோ உடைத்தோ திறப்போம் என்றும் போலீசார் மிரட்டினர்.

நமது நிர்வாகிகளுக்கும் போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நமது நிர்வாகிகள், சார் இந்த பள்ளி அரசாங்க பதிவுப் படி தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் உள்ளது. நாங்கள் எங்கள் இடத்தில் தொழுகின்றோம் நாங்கள் எந்த பிரச்சனையும் செய்யவில்லை எங்களை ஏன் ஜும்ஆ தொழு விடாமல் எங்களுக்கு சொந்தமான இடத்தை விட்டு வெளியே போக சொல்கின்றீர்கள் என்று கேட்டதற்கு,

போலிசார், “ஊர்ஜமாஅத் காரர்கள் நீங்கள் இங்கு தொழுதால் பிரச்சனை செய்வார்கள்” என்று பதில் கூறினர்.

அதற்கு நமது நிர்வாகிகள்,

சரி சார், நாங்கள் இன்று ஜும்ஆ தொழுதாக வேண்டும் எனவே அவர்களது பள்ளிக்கு நாங்கள் சென்று தொழுகின்றோம் அதன் மூலம் பிரச்சனை ஏற்பட்டால் அவர்களையும் பள்ளிவாசலை விட்டு வெளியேற்றுவீர்களா? என்று நியாத்தோடு கேட்டதற்கு, இங்கு நியாயம் அநியாயம், உங்கள் உரிமையை பற்றி யெல்லாம் பேசக்கூடாது முதல்ல பள்ளிவாசல விட்டு வெளியே போங்க என்று போலீசார் தொடர்ந்து அநியாயமாக மிரட்டினர்.

நமது நிர்வாகிகள் வெளியே போக மறுத்ததால் மாநிலப் பொதுச் செயலாளர் உட்பட அங்கிருந்த தவ்ஹீத் சகோதரர்களை கை செய்து போலீசார் வேனில் ஏற்றினர்.

சட்டத்திற்கு முரணாக போலிசாரின் மீது கல் எரிந்து போலீசாரின் மண்டையை உடைத்த ஊர்ஜமாஅத்தினரை பாதுக்காப்புடன் அவர்களது பள்ளிவாசலுக்கு அனுப்ப வைத்த காவல் துறையினர் TNTJ விற்கு சொந்தமான பள்ளியில் அரசாங்க அனுமதியோடு தொழு வந்திருந்தவர்களை தொழவிடால் தடுத்து குண்டுக்கட்டாக கைது செய்யதுள்ளனர். மேலும் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பூட்டு போட்டுள்ளனர்.

சம்வபத்தை கேள்வி பட்ட நம் சகோதரர், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்த இடத்தில் ஆயிரக்கணக்கில் சூழ்ந்தனர்.

காவல் துறையினர் அநியாத்தின் உச்ச கட்டத்திற்கு சென்று விட்டதை அறிந்து கொந்தெலித்து எழுந்தனர்.

மேலாண்மைக்குழு உறுப்பினரான பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிர்வாகள் கைது செய்யபட்டு இருந்த இடத்திற்கு வந்து சூழ்ந்திருந்தவர்களை அமைதிப்படுத்தி, இலஞ்சத்தை வாங்கிக் கொண்டு நியாத்திற்கு எதிராக செயல்படும் அனைத்து அதிகாரிகளின் சட்டயை கழட்டாமல் தவ்ஹீத் ஜமாஅத் விடாது என்று கூறி டிஎஸ்பி அலுவலகத்தை பேரணியாக சென்று முற்றுகையிட்டனர்.

இதில் ஆயிரக்கணக்கில் நம் தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்கொண்டனர்.

எஸ்.பி பட்டிணத்தில் தவ்ஹீதிற்கு எதிராக நடந்த அடக்குமுறையும் தவ்ஹீத் ஜமாஅத் கையான்ட சட்ட ரீதியான நடவடிக்கையும்!

முற்றுகையை தொடர்ந்து கைது செய்து வைக்கப்பட்டிருந்த TNTJ நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டனர்!.

சுமார் 2.30 மணி அளவில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்முற்றுகைப் போராட்டம் மாலை 6.00 மணிவரை தொடர்ந்தது.

போலீசாரால் பூட்டப்பட்ட பள்ளிவாசலின் சாவியை TNTJ விடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையெனில இங்கிருந்து யாரும் செல்ல மாட்டோம் என கூறிக் கொண்டு ஆயிரக்கணக்கில் மக்கள் திருவாடனை டி.எஸ்.பி அலுவகம் முன் திரண்டனர்.

முதற்கட்டமாக டி.ஸ்.பி யிடம் பேச்சு வார்தை நடத்தப்பட்டது. பின்னர் எஸ்.பி அவர்கள் திருவாடனைக்கு வந்து அவருடன் TNTJ நிர்வாகிகள் பேச்சு வார்தை நடத்தினர்.

சுமார் மாலை 6 மணிவரை நடைபெற்ற இப்பேச்சுவார்தையின் இறுதியில் எஸ்.பி அவர்கள் எங்களுக்கு தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தது, இந்த பள்ளிவாசல் TNTJ விற்கு சொந்தமான பள்ளிதான் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் நீங்கள் தொழுகை நடத்த ஆரம்பிக்கலாம் நாளைக்கு (1-8-2009) TNTJ விடம் சாவி ஒப்படைக்கப்படும் என்று வாக்குறுதியளித்த பிறகு முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது!

எல்லாப் புகழும் இறைவனுக்கே!