தலைமையகத்தில் PRESS MEET: உயிரை காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக சென்னை வந்த பாலகோட் முஸ்லிம்கள்! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் இஸ்லாமியர்கள் எனக்கூறிக் கொண்டு மஹதி என்ற பிரிவினர் செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தில் இந்த ஊரைத் தவிர வேறு எங்குமே இல்லை. இவர்கள், தங்களின் மதக் குருக்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம்களை இத்தனை காலமும் நிர்பந்தித்து வருகின்றனர்..

பொதுவாக மஹதிகளைப் பொருத்தவரை ஒரு குணம் உண்டு. இவர்களை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களை அந்த ஊரில் உள்ள ஒரு தனிப்பள்ளிவாசலில் கட்டி வைத்து சித்ரவதை செய்வார்கள். முழுக்க முழுக்க இவர்கள் தங்களை ஒரு தனிப்பிரிவாகவே நினைத்துக் கொண்டு இஸ்லாம் காட்டித் தராத ஒரு தனி வாழ்க்கையை வாழ்கின்றனர்,

இந்த நிலையில் அங்கிருந்த மக்கள் சிலருக்கு ஏகத்துவக் கொள்கை கொஞ்சமாக ஊற்றெடுக்க, அவர்களின் கொள்கை இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானது என்தைப் புரிந்து கொண்டு அங்குள்ள மஹதீகளுக்கு எதிராக அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யத் துவங்குகின்றனர்.

ஆனால் இந்த மக்கள் இதற்கு முன்னர் அந்தக் கூட்டத்தில் தான் இருந்து வந்தார்கள். அவர்களின் வழிமுறைகளைத் தான் பின்பற்றி வந்தார்கள்.

அவர்களுக்குள்ளேயே இந்த ஏகத்துவ தீபம் சுடர் விட்டு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததால், அந்த மஹதீ வழிகேடர்களால் இவர்களை அடித்து உதைப்பதைத் தவிர வேறு வழியை அவர்களால் கையாள முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஏகத்துவ சகோதரர்களை இதனால் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும் இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவர்கள் புகார் கொடுக்கச் சென்ற நேரத்தில் அங்கே ஆய்வாளர் மற்றும் துனைக்கண்காணிப்பாளர் முன்னிலையிலேயே இவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டனர் அந்த வழிகேடர்கள். காவல்துறையில் போதிய பலம் இல்லை என்று கூறி காவல்துறையினரும் கைவிரித்து விட்டனர். அதுமட்டுமின்றி இவர்களிடம்,

நீங்கள் எங்காவது தப்பித்து ஓடி விடுங்கள் இல்லாவிட்டால் அவர்கள் உங்களை கொலை செய்து விடுவார்கள் என இவர்களுக்கு அறிவுறையும்(?) வழங்கியுள்ளனர் காவல்துறையினர். இவர்களின் தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஊர் சென்றால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற அச்சத்தில் வேறு வழியின்றி கையில் காசும் இன்றி உடுத்திய ஆடையுடன் சென்னையில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் தஞ்சம் புகுந்தனர். மஹதிகளின் வெறியாட்டத்தால் அகதிகளாக வந்திருக்கும் கொள்கைச் சகோதரர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரவனைத்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.

அந்த மஹதி வழிகேடர்களின் அயோக்கியத்தனங்களை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இன்று(21/07/2011) பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.,

பத்திரிகையாளர்களைச் சந்தித்த அந்தச் சகோதரர்கள் தங்களின் துக்கம் தாங்காமல் அழுக ஆரம்பித்தனர். வந்திருந்த எல்லோருமே கண்ணீர் விட ஆரம்பித்தனர்.

எங்களுக்கு உடுத்துவதற்கு துணியில்லை, எங்கள் பிள்ளைகளை எங்களால் பார்க்க முடியவில்லை, சொந்த ஊருக்குள்ளே நுழைய முடியவில்லை, நாங்கள் ஏற்றுக்கொண்ட இந்தக் கொள்கைக்காக நாங்கள் இப்போது இந்த அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். என்ன ஆனாலும் எங்களின் கொள்கையிலோ, பிரச்சாரத்திலோ நாங்கள் பின்தங்கிட மாட்டோம். ஆனால் எங்களின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள வழியின்றி எங்களைக் கொலை செய்யும் நோக்கத்தில் வெறியாட்டம் நடத்திய அத்தனை பேரையும் கைது செய்து எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். நாங்கள் பிறந்த எங்கள் ஊருக்குள் நிம்மதியாக நடமாட எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், இந்த வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , எங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

தப்பித்தோம் பிழைத்தோம் என சென்னை வந்த சகோதரர்கள் பத்திரிக்கையாளர் முன்பு கண்ணீர் மழ்க பேட்டியளிக்கும் வீடியோ காட்சி

Download Video

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான்.

அல்குர்ஆன் 61:8