இஸ்லாத்தை ஏற்ற பெண்மணியின் உடல் நல்லடக்கம்!

பேங்களுரில் இஸ்லாத்தை ஏற்ற 65 வயதான பெண்மணி கடந்த 18-7-2011  அன்று காலமானார் பின்னர் அவரது சொந்த ஊரான சென்னை மயிலாப்பூருக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அவரது உறவினர்கள் யாரும் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் தன்னை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டு மரணித்துள்ளார்.

தகவல் அறிந்த தென் சென்னை மாவட்டம் மயிலாபூர் கிளை அவரது உடலை நபி வழி அடிப்படையில் நல்லடக்கம் செய்தது. அல்ஹம்துலி்ல்லாஹ்!