இந்திய அரசின் 2010 பட்ஜட் தாக்கல்: முக்கிய அம்சங்கள்!

2010_budgetநாடாளுமன்றத்தில் இன்று (26-2-2010) நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி  தாக்கல் செய்து வரும் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

ஆண்டுக்கு ரூ. 1.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு முழு வருமான வரி விலக்கு தொடரும்

சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 2600 கோடி

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம்-விலைவாசி உயர்ந்தது

ரூ. 1.6 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி 10 சதவீதமாக இருக்கும். (இதுவரை ரூ. 3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீத வருமான வரி இருந்தது.)

-ரூ. 5 லட்சத்தி்ல் இருந்து 8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20 சதவீதம்

-ரூ. 8 லட்சத்துக்கு மேல் வருட வருமானம் உள்ளவர்களுக்கு வரி 30 சதவீதமாக தொடரும்

ஆன்லைன் செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரி அதிகரிப்பு

ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கட்டாய ஆடிட்

கூடுதலாக பல சேவைகளுக்கும் வரிகள் விதிக்கப்படும்

விவசாய விதைகள் மீதான வரி முழுமையாக விலக்கு

டிவி, ஃபிரிட்ஜ், ஏசி விலையும் உயருகிறது

தங்கம் மீதான சுங்க வரி குறைப்பு

மோனோ ரயில்களுக்கு இறக்குமதி திட்ட அந்தஸ்து

சிடி விலை குறையும்

பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீது மீணடும் 5 சதவீத கலால் வரி

மொபைல் போன்கள் மீதான வரி குறைப்பு. விலை குறையும்

அதிகபட்ச சுங்க வரி 10 சதவீதமாக இருக்கும்

பெட்ரோல், டீசல் விலை உயரும்

பெரிய கார்களுக்கு சுங்க வரி 22 சதவீதமாக உயர்வு

(பெட்ரோலிய பொருட்கள் மீதான கூடுதல் வரியை கண்டித்து எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு)

பெட்ரோலிய பொருட்கள் மீதான சுங்க வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பு (இதனால் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கும். இதை கண்டித்து எதி்ர்க் கட்சிகள் அமளி)

கலால் வரி 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பு

கார்பரேட் நிறுவனங்கள் மீதான கூடுதல் வரி குறைப்பு

இந்த வருமான வரி சலுகையால் ரூ. 26,000 கோடி இழப்பு ஏற்படும்

இந்த புதிய வருமான வரி சலுகை மூலம் 60 சதவீத வருமான வரி செலுத்துவோர் பயன் பெறுவர்.

பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,000 கோடி அதிகரிப்பு

உணவுப் பற்றாக்குறையை தனியார் துறை உதவியோடு வெல்வோம்

பாதுகாப்புத் துறைக்கு ரூ. 1.47 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ. 1900 கோடி

இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதமாக உள்ளது

மொத்த வரி வருமானம் ரூ. 7.46 லட்சம் கோடியாக இருக்கும்

பெண் விவசாயிகள் நலத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி

ரூ. 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 1 சதவீத வட்டிச் சலுகை.

ரூ. 1000 கோடியில் அங்கீகரிக்கப்படாத தொழில் பிரிவினருக்கான சமூக பாதுகாப்பு  நிதியம்.

ஊரக வளர்ச்சிக்கு ரூ. 66,000 கோடி ஒதுக்கீடு

குறைந்த விலை வீடுகளுக்கான மானியம் நீட்டிப்பு. குடிசையில்லா நகர்களை உருவாக்க திட்டம்

மகளிர், குழந்தைகள் நலனுக்கான நிதி 50 சதவீதம் அதிகரிப்பு

நகர்ப்புற வளர்ச்சி, நகர்ப்புற ஏழைகள் நலனுக்கு ரூ. 5,400 கோடி

இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி

புந்தல்கந்த் வறட்சி நிவாரணத்திற்கு ரூ. 1200 கோடி நிதியுதவி

2000 மக்கள் தொகை கொண்ட எல்லா கிராமங்களிலும் வஙகிகள் திறக்கப்படும்

பாரத் நிர்மான் திட்டத்திற்கு ரூ. 48,000 கோடி

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 40,100 கோடி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு ரூ. 31600 கோடி

சுகாதாரத் துறை திட்டங்களுக்கு ரூ. 22,300 கோடி

இப்போதைய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது

2022ம் ஆண்டில் 20,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம்

ஊரக வளர்ச்சிக்கான நிதி 25 சதவீதம் அதிகரிப்பு

மின் சக்தித் துறைக்கு ரூ. 5130 கோடி

சாலை கட்டமைப்பு வசதியைப் பெருக்க ரூ. 19894 கோடி

அடிப்படைக் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு ரூ. 1.73 லட்சம் கோடி

மரபு சாரா எரிசக்தித் திட்டங்களுக்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு.

தேசிய மாசு இல்லா எரிபொருள் நிதியம் அமைக்கப்படும்

விவசாயக் கடன்களுக்கு 2 சதவீத மானியம்

திருப்பூர் ஜவுளித்துறையின் வளர்ச்சிக்கு மாநில அரசுக்கு ரூ. 200 கோடி நிதியுதவி

வங்கித் துறையில் தனியாரை ஊக்குவிக்க நடவடிக்கை

2011ம் ஆண்டில் ரூ. 3.75 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு.

5 மாபெரும் உணவுப் பூங்காங்கள் அமைக்கப்படும்

தினந்தோறும் 20 கி.மீ புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்

அதிக பொருளாதார மண்டலங்கள் அமைக்க திட்டம்

நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்கு 13 சதவீத கூடுதல் நிதி

வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு

வட கிழக்கில் விவசாயத்துறையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதியுதவி

ஏற்றுமதியை ஊக்குவிக்க 2 சதவீத வரி சலுகை நீட்டிப்பு

அரசு வங்கிகள் விவசாய கடன்களை அதிக அளவில் அளித்து வருகின்றன

ஊரக வங்கிகளை மேலும் ஸ்திரப்படுத்த கூடுதல் நிதி

விவசாய வளர்ச்சிக்கு 4 அம்ச திட்டம்

அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 16,000 கோடி உதவி

பெட்ரோலிய விலைகள் குறித்த பாரிக் கமிட்டி பரிந்துரையை அமலாக்க யோசனை

2 மாதங்களில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்

வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கை மேலும் எளிமையாக்கப்படும்.

மேலும் அதிக தனியார் வங்கிகளுக்கு லைசென்ஸ்கள் தரப்படும்

சமூக பொருளாதார திட்டங்களுக்கு அதிக நிதி

தனியார் முதலீடுகளால் 9 சதவீத வளர்ச்சி நிச்சயம் சாத்தியம்

உரங்கள் மீதான மானியம் குறைக்கப்படும்

இந்த ஆண்டு பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ரூ. 25,000 கோடி அரசு முதலீட்டை வாபஸ் பெற இலக்கு

விரைவில் 10 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்

அரசுச் செலவீனங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

இரண்டு இலக்க பணவீக்கம் பெரும் கவலையளிக்கிறது

உலக பொருளாதார சிக்கலால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சலுகைளை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது

உற்பத்தித்துறை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முயற்சி

ஊரக அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம்.

நன்றி: தட்ஸ் தமிழ் , NDTV