ஆழ்வார்திருநகர் ஜனாஸா பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக கடந்த 05.06.2011 அன்று பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் பெண் ஜனாஸாவை எப்படி குளிப்பாட்டுவது, எப்படி கபனிடுவது, எப்படி ஜனாஸா தொழுகை தொழுவது போன்ற விஷயங்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!