ஆழ்வார்திருநகர் கிளையில் ஜனாஸா பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக கடந்த 22.05.2011 அன்று ஆண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் ஜனாஸாவை எப்படி குளிப்பாட்டுவது, எப்படி கபனிடுவது, எப்படி ஜனாஸா தொழுகை தொழுவது போன்ற விஷயங்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!