ஆழ்வார்திருநகர் கிளையில் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் கடந்த மார்ச் 13, 2010 அன்று பெண்களுக்கென பிரத்யேக ஜனாஸா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சகோதரி தாஹிரா அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள் மேலும் கடந்த 14-3-2010 அன்று ஆண்களுக்கான ஜனாஸா பயிற்சி முகாமில் ஹசன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள்.

இதில் மனிதன் இறந்தவுடன் முதலில் செய்யவேண்டியவை, ஜனாஸாவை எவ்வாறு குளிப்பாட்டுவது, ஜனாஸாவை எப்படி கபன் செய்வது, ஜனாஸா தொழுகை மற்றும் அடக்கம் செய்வது பற்றி விளக்கமும், செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பபட்டது.