அயனாவரத்தில் கல்வி கருத்தரங்கம்

அயனாவரம் நகர TNTJ மாணவர் அணி நடத்திய கல்வி கருத்தரங்கம் கடந்த 9 ஆம் தேதி அயனாவரம் நகராட்சி மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது, இதில் ஏராளாமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வட சென்னை மாவட்ட தலைவர் நிஜாம் அவர்கள் தலைமை வகித்தார் மாநில மாணவர் அணி செயலாளர் S.சித்திக் துணை செயலாளர்கள் அல் அமீன், சர்வத் கான், மற்றும் மார்க்கப் பேச்சாளர் சகோதரி. ஹுமேரா யாஸ்மின் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் பயன் பெறும் வகையில் உரையாற்றினர்.

இதன் பிறகு கலந்தாய்வு மூலம் தனித்தனியாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மாணவர் அணியின் சமீம் மற்றும் நகர நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஒருங்கிணைத்திருந்தனர்.

மாற்று மத சகோதரர்கள் உட்பட ஏராளமானேர் இந்த நிகழ்ச்சியால் பயன்பெற்றனர்.